Homeஇந்தியாஒரு கார் பிளேட்டுக்கு இத்தனை லட்சம் விலையா?

ஒரு கார் பிளேட்டுக்கு இத்தனை லட்சம் விலையா?

சமீப காலமாக கார்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, அதற்கான பதிவு எண்ணை வாங்கவும் பணம் செலவு செய்ய பலர் தயாராக உள்ளனர். இதற்காக மாதாமாதம் ஏலமும் விடப்படுகிறது. பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை பலர் தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.

விருப்பப்பட்ட எண்ணை வாங்க பிரீமியம் எஸ்யூவி கார் உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். அதிலும் 0001 என்ற எண்ணின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்தால், பணமே கொடுக்காமல் ஒரு காலத்தில் இந்த எண்ணை வாங்கிய நமது தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்.

இந்த ஆண்டு ஜூன் வரை விஐபி எண்களின் மாதாந்திர ஏலத்தில் 0001 என்ற எண் அதிக ஏலத்தில் எடுக்கப்பட்டது. மார்ச் மாதத்தில் அதன் ஏலத்தொகை ரூ.23.4 லட்சமாக இருந்தது. ஆனால், இந்த எண்ணை வாங்குபவரின் தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கைராதாபாத் RTO அலுவலகத்தில் 9999 என்ற எண் கொண்ட ஃபேன்சி நம்பர் பிளேட் 19 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்போகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, ‘0001’ என்ற நம்பர் பிளேட் எண் 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும், ‘0009’ என்ற நம்பர் பிளேட் எண் 6 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய்க்கும், ‘0006’ என்ற நம்பர் பிளேட் எண் 2 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

சற்று முன்