Homeஇந்தியாமம்தா வெளிநடப்பு பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து.

மம்தா வெளிநடப்பு பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியது உண்மை அல்ல’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் உரையை நாங்கள் கேட்டோம். ஒவ்வொரு முதல்வருக்கும் நேரம் ஒதுக்கப்பட்டது. அது திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மைக் அணைக்கப்பட்டதாக மம்தா பானர்ஜி கூறுவது முற்றிலும் தவறு.

ஒவ்வொரு முதல்வரும் பேசுவதற்கு உரிய நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், மைக் அணைக்கப்பட்டதாக அவர் கூறியது துரதிர்ஷ்டவசமானது. அது உண்மையில்லை. மறுபடியும் பொய்யை அடிப்படையாக கொண்ட கதையை உருவாக்குவதை விட, அவர் உண்மை பேச வேண்டும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

சற்று முன்