இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக மிலாடி நபி உள்ளது. இது நபிகள் நாயகத்தின் நினைவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. நபிகள் நாயகத்தின் பிறந்தநாளும், மறைந்த நாளும் ஒரே தேதியாகும்.
இந்த நாளை தான் மிலாது நபி என்று இஸ்லாமியர்கள் கொண்டாடி வருகின்றனர். கி.பி 570ல் மெக்கா நகரில் பிறந்தவர். மிகுந்த செல்வாக்கு மிகுந்த குடும்பத்தில் இருந்தவர். இவரை அல் அமீன் என்றும் அழைத்தனர். தன்னுடைய 23வது வயதில் திருமணம் செய்து கொண்டார். பின்னர் 40வது வயதில் தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று அறிவித்து கொண்டார். அதாவது, இறைவன் தன்னை தூதுவராக இந்த உலகிற்கு அனுப்பி வைத்துள்ளார்.நமது வணக்கத்திற்கு உரியவர் அல்லாஹ் ஒருவரே என்று கூறி உலக மக்களுக்கு நல்வழி காட்டும் வேலையில் ஈடுபட்டார். பின்னர் மதீனாவிற்கு இடம்பெயர்ந்தார். அங்கு இவருக்கு பெரிய அளவில் கொண்டாடப்பட்டார். மிகவும் பணிவுடையவராக, பிறரை துன்பத்தில் இருந்து நீக்குபவராக திகழ்ந்தார். தன்னுடைய 63வது வயதில் காலமானார்.அல்லாவின் தூதராக கருதப்படும் அவரது நினைவை போற்றும் வகையில் முதல் முதலில் எகிப்தில் மிலாடி நபி கொண்டாடப்பட்டது.
இந்த நாளில் முகம்மது நபியின் போதனைகளை போற்றும் விதமாக இஸ்லாமியர்கள் புனித நூலான குரானை வாசிப்பது மிக முக்கிய கடமையாக வைத்துள்ளனர். பெரும்பாலான இஸ்லகாமியர்கள் இந்த நாளில் நோன்பு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் உடைகளை தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மிலாடி நபி அன்று இஸ்லாமியர்கள் அனைவரும் இறை தூதரான முகம்மது நபியை நினைத்து சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்த நாளில் தங்களின் நண்பர்கள், உறவினர்களை அழைத்து பரிசுகள் வழங்கி, ஒருவர் மற்றவரின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வது, ஒன்றாக சேர்ந்து உணவ சமைத்து உண்பது ஆகியவற்றை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பிறை தெரியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெரியவில்லை. எனவே செப்டம்பர் 6ஆம் தேதி முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் பொது விடுமுறையாக இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக தமிழ் காலண்டர் 2024ன் படி செப்டம்பர் 16 அன்று மிலாது நபி கொண்டாடப்படும் என்றும், அன்று அரசு விடுமுறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் தலைமை ஹாஜி அறிவிப்பால் விடுமுறையில் மாற்றம் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 17 செவ்வாய் கிழமை ஆகும். எனவே இடையில் வரும் திங்கள் அன்று விடுமுறை எடுத்து கொண்டால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துவிடும்.