Homeஇந்தியாபிரதம மந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க.

பிரதம மந்திரியின் முத்ரா யோஜனா திட்டத்தைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (Pradhan Mantri MUDRA Yojana – PMMY). சிறு தொழில் முனைவோர்களுக்கு உதவும் விதமாக இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது செயல்பாட்டில் உள்ளது. வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் மூலமாக கடன் பெறலாம்.தொழிலை தொடங்கவோ அல்லது தொழிலை மேம்படுத்தவோ இத்திட்டத்தின் வாயிலாக நிதியுதவி கிடைக்கும். பொதுவாகவே கடன் பெறுவதற்கு பொருளையோ அல்லது பத்திரத்தையோ கொடுக்க வேண்டும். ஆனால் முத்ரா கடன் திட்டத்திற்கு எந்த விதமான அடமானமும் தேவையில்லை. தக்க ஆவணங்கள் இருந்தால் போதும்.

முத்ரா கடன் திட்டத்தில் மூன்று விதமாக கடன்களை பெறலாம். இதில் சிஷு திட்டத்தின் கீழ் – ஸ்டார்ட்-அப் மற்றும் முதல் முறை தொழில் முனைவோருக்கு ரூ.50,000 வரை கடன் பெறலாம். கிஷோர் பிரிவின் கீழ் ரூ. 5,00,000 வரை கடன்களும், தருண் திட்டத்தின் வாயிலாக ரூ. 10 லட்சம் வரை கடன்களும் வழங்கப்படுகின்றன.

முத்ரா திட்டத்தின் மூலமாக கடனைப் பெற தொழில் முனைவோர் 18 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும் 65 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச கடன் தொகை வரம்பு என்பது இல்லை. ஆனால் ரூ. 10 லட்சம் வரை மட்டுமே ஒரு தொழில்முனைவோர் கடன் பெற முடியும். 5 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

முத்ரா கார்டுகள் மூலமாகவும் ஆன்லைனிலும் முத்ரா செயலியான ‘முத்ரா மித்ரா’ மூலமாகவும் அனைத்து முத்ரா கடன்களையும் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் விவசாயம் மற்றும் கார்ப்பரேட் தொழில் முனைவோர்கள் கடன் பெற இயலாது. முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

சற்று முன்