Homeஇந்தியாமும்பை ஐஐடி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமா? எதற்கு தெரியுமா?

மும்பை ஐஐடி மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதமா? எதற்கு தெரியுமா?

மார்ச் 31ம் தேதி ஐஐடி வளாகத்தில், performing arts festival என்ற நிகழ்வு நடைபெற்றது. இதில் பல நடனங்கள், நாடகங்கள் போன்றவற்றை அரங்கேறின. அதில், சில மாணவர்கள் ஒன்றாக இணைந்து, ராமாயண காவியத்தை நாடகமாக அரங்கேற்றியிருக்கின்றனர். இந்த நாடகமானது ராமாயணத்தில் சொல்லப்பட்ட காட்சிகளை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முற்றிலுமாக மாற்றி நாடகத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அடுத்து வந்த சில நாட்களில் மாணவர்கள் அரங்கேற்றிய நாடகத்தின் சில காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. கலை சுதந்திரம் என்ற பெயரில் மத உணர்வுகளைப்புண்படுத்துவது போல் இந்த நாடகம் இருக்கிறது என்றும் உண்மையான ராமாயண காவியத்திற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது என்றும் சிலர் விமர்சனங்களை முன் வைத்தனர்.

அதன்பிறகு சிலர் எழுத்துப்பூர்வமாக ஐஐடி நிர்வாகத்திற்கு புகார்கள் அனுப்பியதாக கூறப்படுகிறது. அப்புகாரில் மாணவர்கள் அரங்கேற்றிய இந்நாடகம் பல வழிகளில் ராமாயணத்தை இழிவுபடுத்துவதாகவும், மாணவர்கள் பெண்ணியத்தைக் காட்டுகிறோம் என்ற பெயரில் கலாசாரத்தை கேலி செய்வதாகவும் புகார் தரப்பட்டது.

இதனையடுத்து, மும்பை ஐஐடி இன்ஸ்டிடியூட் அதிகாரிகள் இந்நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களுக்கு சில தடைகளை விதித்து, கூடவே அபராதமும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது.அதன்படி இந்நாடகத்தை அரங்கேற்றிய பட்டதாரி மாணவர்களுக்கு தலா 1.2 லட்சம் அபராதம் என்றும்ஜூனியர் மாணவர்களுக்கு தலா ரூ. 40,000 அபராதம் செலுத்தவும் மேலும் விடுதி வசதிகளிலிருந்து அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

புகார்களுக்குப் பிறகு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சற்று முன்