Homeஇந்தியாடெல்லியில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை அறிவிப்பு

டெல்லியில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கை அறிவிப்பு

டெல்லியின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது.தொடர் கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடும் மழை நீரால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் ஐஎம்டி கணித்துள்ளது. இந்த வானிலை காரணமாக டெல்லி “ஆரஞ்சு” எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில் டெல்லியில் கனமழை முதல் மிகக் கனமான மழை பெய்யும் என்றும் IMD எச்சரித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜூலை 1 ஆம் தேதி வரை டெல்லியில் மிகக் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள் உட்பட பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்