HDFC வங்கியின் சேவைகள் 14 மணி நேரத்திற்கு முடங்க உள்ளது.HDFC வங்கிக்கு நாடு முழுவதும் 93 மில்லியன் தனிநபர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். அதோடு, வணிக கணக்குகளும் உள்ளன.
பதிமூன்றரை மணி நேர முடக்கத்தின்போது, குறிப்பிட்ட சேவைகளை மட்டுமே வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
நெட் & மொபைல் பேங்கிங் UPI – அதிகாலை 3 மணி முதல் 3:45 மணி வரையும் காலை 9:30 மணி முதல் நண்பகல் 12:45 வரை மட்டும் மொபைல் பேங்கிங் சேவைகள் கிடைக்காது.
பில் பேமெண்ட் – புதிய பில்களையும் ஏற்கனவே இருக்கும் பில்களை பார்க்க மட்டும் முடியும்.
டிமேட், கார்டுகள் மற்றும் கடன்: சேவைகளை பார்க்க மட்டும் முடியும்.
மியூச்சுவல் ஃபண்டுகள்: மியூச்சுவல் ஃபண்டுகள் தொடர்பான சேவையை மாற்ற முடியும், பார்க்க முடியும், விசாரிக்க முடியும்.
HDFC வங்கியின் சிஸ்டம் அப்டேட் எப்போது தொடங்கும்?
ஜூலை 13ஆம் தேதி, சனிக்கிழமை, அதிகாலை 3:00 மணிக்கு ஆரம்பம்..மாலை 4:30 மணிக்கு முடிவடையும்.
பணம் எடுத்தல்: டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்: எந்த ஏடிஎம்மிலிருந்தும் குறிப்பிட்ட தொகை வரை மட்டுமே பணம் எடுக்கலாம்.
ஷாப்பிங்: கடைகளில் குறிப்பட்ட அளவு மட்டுமே ஸ்வைப் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகள் நடைபெறும்.
ஆன்லைன்: குறிப்பிட்ட அளவு மட்டுமே ஆன்லைனில் வாங்க முடியும்.