Homeஇந்தியாநீட் தேர்வு ஒத்திவைப்பு

நீட் தேர்வு ஒத்திவைப்பு

கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. வினாத்தாள் கசிவு, மதிப்பெண்கள் வழங்குவதில் மோசடி என அடுக்கடுக்கான குளறுபடிகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுதொடர்பாக நாடு முழுவதும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த சூழலில், நாடு முழுவதும் இன்று (ஜூன் 23) மருத்துவ மேற்படிப்புகளுக்கான நீட் – PG தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எம்.டி., எம்எஸ் போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு இதுவாகும். லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், கடந்த 18-ம் தேதி இதற்கான ஹால் டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த நீட் முதுநிலை தேர்வை மத்திய அரசு திடீரென ரத்து செய்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இன்று நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். சில போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் வந்தததை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீட் முதுநிலை தேர்வின் செயல்முறைகளை மதிப்பீடு செய்ய மத்தி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்