Homeஇந்தியாமத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 170 இடங்கள் காலியாக உள்ளது விண்ணப்பிப்பவர்களுக்கு சரியான நேரம் இது.

மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 170 இடங்கள் காலியாக உள்ளது விண்ணப்பிப்பவர்களுக்கு சரியான நேரம் இது.

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கோ லிமிடெட் என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை காப்பீடு நிறுவனம் ஆகும். இங்கு, Accounts, Generalist பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* Accounts- 50,

* Generalist- 120

கல்வி தகுதி என்ன?
Accounts பணியிடங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

Generalist பணியிடங்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு
விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?
https://www.newindia.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்
விண்ணப்ப கட்டணம் ரூ.850. எஸ்.சி., எஸ்.டி, PWBD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. விண்ணப்பிக்கக் கடைசி தேதி செப்டம்பர் 29.

தேர்வு செய்வது எப்படி?
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

சற்று முன்