நாடே எதிர்பார்க்கும் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
பிரதமர் மோடியின் மூன்றாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் மக்கள் பயன் பெறும் வகையிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று நேரில் சந்தித்தார்.
நீதித்துறை இணை அமைச்சர்கள் உயர் அதிகாரிகளுடன் சென்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று சந்தித்தார் நிர்மலா சீதாராமன். சிகப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்ட பட்ஜெட் உரையுடன் குடியரசுத் தலைவரை நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார். அப்போது நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டிவிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்தார்.