முன்னாள் ஒடிஷா மாநில ஆளுநர் முரளிதரன் சந்திரகாந்த் பண்டாரே (95) வயது முதிர்வு காரணமாக காலமானார்.
மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். அத்துடன், 3 முறை மாநிலங்களவை எம்.பி.,யாகவும் பதவி வகித்திருக்கிறார். அவரது மறைவுக்கு முதல்வர் மோகன் சரண் மஜி, நவீன் பட்நாயக், சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.