Homeஇந்தியாஒலிம்பிக் கம்யூனிட்டி உறுப்பினராக நீட்டா அம்பானி தேர்வு.

ஒலிம்பிக் கம்யூனிட்டி உறுப்பினராக நீட்டா அம்பானி தேர்வு.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 142 ஆவது கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், சமூக சேவகருமான நீடா அம்பானி இந்தியாவின் உறுப்பினராக போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டித் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வரும் ஜூலை 26 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரில், 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக் போட்டியின்போது ஒவ்வொரு நாட்டின் வீரர்கள் தங்குவதற்காகவும், அந்த நாட்டை சேர்ந்த விஐபிக்கள் வருகை, கலாசாரத்தை பறைசாற்றும் கண்காட்சி, பார்வையாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்காக ஒவ்வொரு நாடுகளும் இல்லம் ஒன்றை அமைக்கும். வீரர்களின் தற்காலிக ஓய்வு அறையாகவும் இது பயன்படுத்தப்படும்.

இந்நிலையில் முதன்முறையாக இந்தியா தனது இல்லத்தை (இந்தியா ஹவுஸ்) பாரீஸ் ஒலிம்பிக் வளாகத்தில் அமைத்துள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் இணைந்து நீடா அம்பானியின் ரிலையன்ஸ் அறக்கட்டளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இதேபோன்று இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு நீடா அம்பானி தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் அவர் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று இந்திய விளையாட்டு உலகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக நீடா அம்பானி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்