Homeஇந்தியாபொருளாதாரத்தில் பின்தகிய மக்களுக்காக இருக்கும் காப்பீடு திட்டம் வெறும். 436 ரூபாய் செலுத்தினால் போதும் 2...

பொருளாதாரத்தில் பின்தகிய மக்களுக்காக இருக்கும் காப்பீடு திட்டம் வெறும். 436 ரூபாய் செலுத்தினால் போதும் 2 லட்சம் கிடைக்கும்.

இன்றைய காலகட்டத்தில் காப்பீடு என்பது அனைவருக்கும் மிக முக்கியமானது. எதிர்பாராத வகையில், கடுமையான நோய் காரணமாகவோ, விபத்து காரணமாகவோ, குடும்ப வருமானத்தின் ஆதாரமாக இருக்கும் நபர் இறந்து விட்டால், அந்தக் குடும்பத்தை கை தூக்கி விடும் முக்கிய பணிகள் செய்வது ஆயுள் காப்பீடு.

பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் மக்களுக்காக, மருத்துவ காப்பீட்டை தரக்வடிய திட்டம்தான் இந்த பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (PMJJBY).. அந்தவகையில், வருடத்துக்கு ரூ.2 லட்சம் ரூபாய் வரை பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கான மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா (PMJJBY) திட்டத்தின் பலனை பெற வேண்டுமானால், வருடத்துக்கு 436 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும்.. அதாவது மாத மாதம், ரூ.40க்கும் குறைவாக ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும். பாலிசிதாரர் உயிரிழந்துவிட்டால், நாமினி அல்லது குடும்பத்தை சேர்ந்தவருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்..

அரசின் இந்த காப்பீட்டுத் திட்டமானது ஜூன் 1ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதிக்குள் வங்கி அல்லது போஸ்ட் ஆபிஸ் கணக்கில் இருந்து ஆண்டுக்கு ரூ.436 டெபிட் செய்யப்படும்.இந்தக் காப்பீட்டை ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டும்.PMJJBY திட்டத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பதிவு செய்தால், ஆண்டு பிரீமியமாக ரூ.436 செலுத்த வேண்டும். அதே நேரத்தில் செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பதிவு செய்தால் ரூ.342 மட்டுமே பிரீமியமாக செலுத்த வேண்டும். அதெ எபோன்று, டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பதிவு செய்தால் ரூ.228 பிரீமியமாக செலுத்த வேண்டும். இறுதியாக, நீங்கள் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பதிவு செய்தால், பிரீமியம் தொகை ரூ.114 ஆக இருக்கும்.

மத்திய அரசின் இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் இணைய, வயதுவரம்பு 18 குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆண்டுகள். அதிகபட்ச வயது வரம்பு 55 ஆண்டுகள். அதாவது 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்ட நபர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தில் இணையலாம். திட்டத்தில் சேருபவர்கள் கண்டிப்பாக வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும். காப்பீடுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு மூடப்பட்டாலோ, பிரீமியம் வசூலிக்கும் தேதியான மே மாதம் 25 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையினான காலகட்டத்தில், கணக்கில் போதுமான பணம் இல்லை என்றாலும் காப்பீடு காலாவதி ஆகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதம மந்திரி ஜீவன் ஜோதி பீமா காப்பீட்டு திட்டத்தில் சேருவதற்கு மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை. எனினும் குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் உத்தரவாத கடிதத்தை நீங்கள் அளிக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் இணைய வேண்டுமானால், 18 வயது முதல் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்… இந்த காப்பீடு திட்டமானது, ஒரு வருடத்திற்கு மட்டுமே இன்சூரன்ஸ் கவரேஜ் தரக்கூடியது என்பதால், பாலிசியை வருடந்தோறும் புதுப்பித்து கொள்ள வேண்டும்..

இந்த திட்டத்தில் சேர, வங்கி கணக்குடன் வங்கி கணக்கோடு ஆதார் நம்பரையும் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா திட்டத்தில் இணைந்த ஒருவர் திடீரென இறந்துவிட்டால், அவரது நாமினி சம்பந்தப்பட்ட வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்க வேண்டும். பாலிசிதாரரின் இறப்புச் சான்றிதழை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.க்ளைம் செய்வதற்கு, இறப்பு சான்றிதழ் மட்டுமல்லாமல், மருத்துவமனை ரசீது, (Discharge Receipt) போட்டோ, கேன்சல் செய்யப்பட்ட செக் லீப், நாமினியின் வங்கிக் கணக்கு என பல சம்பந்தப்பட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும். இன்சூரன்ஸ் நிறுவனம் உங்களது ஆவணங்களை சரிபார்த்து பிறகு, காப்பீட்டு பணம் வங்கி கணக்கில் வந்துவிடும. இதற்கு 30 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும்.

சற்று முன்