Homeஇந்தியாபானி பூரி சாப்பிடக்கூடாது. கர்நாடகாவில் ரோட்டோர கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் சோதனை.

பானி பூரி சாப்பிடக்கூடாது. கர்நாடகாவில் ரோட்டோர கடைகளில் ஆய்வு செய்த அதிகாரிகள் சோதனை.

கர்நாடகாவில் பானி பூரியின் மாதிரிகளை பரிசோதித்த பின்னர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சியூட்டும் முடிவுகளைக் கண்டறிந்துள்ளனர். கர்நாடகாவில் உள்ள பானி பூரி கடைகளில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் 22% மாதிரிகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதி பொருட்கள் கண்டுபிடுப்பு.ஷவர்மா கடைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 47% மாதிரிகளில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

260 மாதிரிகளில், 41 மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை வண்ணங்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெக்கான் ஹெரால்டிடம் பேசிய உணவு பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீனிவாஸ் கே, “கர்நாடகா மாநிலம் முழுவதும் தெருக்களில் வழங்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து எங்களுக்கு பல புகார்கள் வந்தன. சாலையோர கடைகளில் இருந்து மாநிலம் முழுவதிலுமிருந்து உணவகங்கள் வரை மாதிரிகளை சேகரித்தோம். பல மாதிரிகள் பழமையான நிலையில் மற்றும் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என்று கண்டறியப்பட்டன. பானி பூரி மாதிரிகளில் brilliant blue, sunset yellow மற்றும் tartrazine போன்ற ரசாயனங்கள் காணப்பட்டன, அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.

முன்னதாக , கோபி மஞ்சூரியன் மற்றும் பஞ்சு மிட்டாய் போன்ற உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் உணவு வண்ண முகவர் ரோடமைன்-பி ஐ கர்நாடக அரசு தடை செய்தது. விற்பனையாளர்கள் தங்கள் உணவகங்களில் இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

சற்று முன்