Homeஇந்தியாராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முதுகு வலி காரணமாக கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கீழ் செயல்படும் பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்ட ராஜ்நாத் சிங்கின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு தொடர் சிகிச்சைகளை அளித்து வந்தனர். இது குறித்து கடந்த 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதுகு வலி காரணமாக பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை நன்றாக இருக்கிறது. அவர் கண்காணிப்பில் இருக்கிறார்” என்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று அந்த மருத்துவமனை நேற்று (ஜூலை 13) தெரிவித்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் செய்தித் தொடர்பு பிரிவின் பொறுப்பாளர் ரிமா ததா, “முதுகு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட ராஜ்நாத் சிங்கின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணி அளவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்