Homeஇந்தியாமாதம் வரும் 7 லட்ச ரூபாய் சம்பளத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் தவிக்கும்...

மாதம் வரும் 7 லட்ச ரூபாய் சம்பளத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தப்பாதிகள்!

பெரும்பாலும், மக்கள் வசதியாக வாழ போதுமான பணம் இல்லை என்று புலம்பி வருகின்றனர். இருப்பினும், சமீபத்தில், பெங்களூரை சேர்ந்த ஐடியில் பணிபுரியும் தம்பதியினர், போதுமான பணம் வைத்திருந்தாலும், அதை எங்கு, எப்படி செலவிடுவது என்று தெரியாத ஒரு அசாதாரண குழப்பத்தில் இருப்பதாக கூறியுள்ளது கேட்போரை அதிர்ச்சியடைய செய்கிறது.

இந்திய வல்லுநர்கள் சம்பளம், பணியிடங்கள் மற்றும் நிதி பற்றி விவாதிக்கும் கிரேப்வைன் தளத்தின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சௌமில் திரிபாதி இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பதிவின் படி, 30 வயதான கணவன்-மனைவி இருவரும் பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களாக பணிபுரிகின்றனர். அவர்களின் மாத வருமானம் ₹ 7 லட்சமும், வருடாந்திர போனஸும் அடங்கும். அதில் இருந்து ₹ 2 லட்சத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதாகவும், அவர்களின் மாத செலவுகள் ₹ 1.5 லட்சம். சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். தம்பதியருக்கு குழந்தைகளும் இல்லை.

இருப்பினும், மாத இறுதியில், அவர்களின் வங்கிக் கணக்குகளில் இன்னும் ₹3 லட்சத்துக்கு மேல் மீதம் உள்ளது. ”அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. ஆலோசனை தேவை என்று கேட்டதாக ஸ்க்ரீன்ஷாட் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில், இந்திய தொழிலதிபர்கள் மட்டுமே இப்படியான அதிகப்படியான பிரச்சனைகளில் சிக்குவார்கள். ஆனால் இன்று 30 வயது இளைஞர்கள் கூட பணக்காரர்களின் பிரச்சனைகளை எதிர்கொள்வதை நாம் பார்க்கிறோம் என்று திரிபாதி கூறியுள்ளார்.

சற்று முன்