Homeஇந்தியாவிண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம் திரும்பவும் பூமிக்கு வருவதில் சிக்கல்.

விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம் திரும்பவும் பூமிக்கு வருவதில் சிக்கல்.

கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விஞ்ஞானியான புட்ச் வில்மோர் .அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து தங்களது பணியை முடித்துவிட்டு ஜூன் 13ஆம் தேதி பூமிக்கு திரும்புவார்கள் என அமெரிக்க விண்வெளி மையமான நாசா தெரிவித்தது.

ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் போயிய் ஸ்டார்லைனர் விண்கலத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்ப தேதி குறிக்கப்பட்டது.ஆனால் மீண்டும் மீண்டும் போயிங் ஸ்டார்லைனரில் பிரச்சனை ஏற்பட்டதால் பயணங்கள் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 50 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளார். இதனிடையே உடல் நலக்குறைவாலும் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தோடு இயக்கப்பட்டு இருக்கும் போயிங் விண்கலத்தின் ஃப்ளைட் கன்ட்ரோலர் த்ரஸ்டர்கள் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டன. இந்த சோதனை வெற்றி பெற்றதாகவும், விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் சோதனையின் போது ஸ்டார்லைனர் கலிப்சோவிற்குள் அமர்ந்து தகவல்களை வழங்கியதாகவும்ம் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.போயிங் விண்கலத்தில் ஹீலியம் கசிவு சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஆகஸ்ட் மாதத்தில் எப்போது வேண்டுமானாலும் பூமிக்கு திரும்பலாம் என போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சற்று முன்