Homeஇந்தியாதிருப்பதி மலை மீது ஏற இருசக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி மலை மீது ஏற இருசக்கர வாகனங்களுக்கு தடை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 4-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்வான கருட சேவை, அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை தருவார்கள் என்பதால், திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

திருமலைக்கு ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே, வாகனங்களை நிறுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பக்தர்களின் பாதுகாப்புக்காக வழக்கமான நடைமுறைகளும் பின்பற்றப்படுகின்றன.

அவ்வகையில், கருட சேவையை முன்னிட்டு அக்டோபர் 7-ம் தேதி இரவு 9 மணி முதல், 9-ம் தேதி காலை 6 மணி வரை திருமலைக்கு செல்லும் இரண்டு மலைப்பாதைகளிலும், இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு தேவஸ்தானத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சற்று முன்