Homeஇந்தியாதிருப்பதியில் 300 ரூபாய் டிக்கெட் இனிமேல், 200 ரூபாய் தான் தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதியில் 300 ரூபாய் டிக்கெட் இனிமேல், 200 ரூபாய் தான் தேவஸ்தானம் அறிவிப்பு.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும், இணையதளங்களிலும் வெளியாகி வரும் பலவிதமான பக்தர்கள் பக்தர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த தகவல்கள் உண்மை என நம்பி பலரும் தேவஸ்தான நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டும் வருகின்றனர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலை பொறுத்த வரை திவ்ய தரிசனம் எனப்படும் இலவச தரிசனத்திற்கு அடுத்த படியாக அதிகமானவர்கள் தேர்வு செய்யும் முறை ரூ.300 சிறப்பு தரிசனத்தை தான். இதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் சென்று மூன்று மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 23ம் தேதி தேவஸ்தான நிர்வாகம் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவுகளை நடத்துகிறது. இந்த முறையில் டிக்கெட் முன்பதிவு செய்து, தரிசனம் பெறும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு வேண்டும் என்கிறவர்கள் லட்டு கவுன்டரில் நேரில் சென்று, ரூ.50 செலுத்தி லட்டுக்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த முறையே தற்போது வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல் லட்டு பிரசாத விலையும் ரூ.50 லிருந்து ரூ.25 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளதாக வாட்ஸ்ஆப் குழுக்கள் சிலவற்றிலும், சமூக வலைதளங்களிலும் பலவிதமான செய்திகள் பரவி வருகிறது. இன்னும் சில இணையதளங்களில் ரூ.300 சிறப்பு தரிச்ன டிக்கெட் மற்றும் லட்டு விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் உண்மை என நம்பி குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் இவை போலிசான தகவல்கள் என்றும், இது போன்ற செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

சற்று முன்