Homeஇந்தியாதிருப்பதியில் இயங்கி வந்த பிரபல்யமான ஹோட்டலை, தேவஸ்தான அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது.

திருப்பதியில் இயங்கி வந்த பிரபல்யமான ஹோட்டலை, தேவஸ்தான அதிகாரிகளால் இழுத்து மூடப்பட்டது.

திருப்பதியில் ஏராளமான தனியார் உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன. திருப்பதி வரும் பக்தர்கள் அங்குள்ள தனியார் உணவகங்களிலும் சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த உணவகங்களில் சாப்பாடு, இட்லி, தோசை, பொங்கல், நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ், பூரி, சப்பாத்தி போன்றவையும் வழங்கப்படுகிறது. வெரைட்டியாக சாப்பிட விரும்பும் பக்தர்கள் இந்த தனியார் உணவகங்களை நாடி வருகின்றனர். இந்நிலையில் திருமலையில் இயங்கி வரும் பெரிய ஹோட்டல்களில் ஒன்று பாலாஜி பவன் ஹோட்டலுக்கு தேவஸ்தான நிர்வாகம் சீல் வைத்துள்ளது.

பாலாஜி பவன் ஹோட்டலுக்கு சீல் வைத்த தேவஸ்தான நிர்வாகம் அதன் அங்கீகாரத்தையும் ரத்து செய்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தான நிர்வாக தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டுள்ளது. அதில் திருமலையில் உள்ள ஒன்பது பெரிய கேன்டீன்களில் ஒன்றின் கீழ் வரும் கவுஸ்துபம் அருகே உள்ள ஹோட்டல் பாலாஜி பவன் உரிமம் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் ஹோட்டலுக்கு இறுதி அறிவிப்பு கொடுக்கப்பட்டது என்றும் தற்போது ஹோட்டலில் நிலுவையில் உள்ள உரிமக் கட்டணம் ரூ.76,04,196 என்றும் தெரிவித்துள்ளது. உடனடியாக உரிமக் கட்டணம் செலுத்தாததால் ஓட்டலின் உரிமத்தை ரத்து செய்த நிலையில், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஹோட்டலை கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்