Homeஇந்தியாதங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 160 ரூபாய் குறிப்பு.

தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 160 ரூபாய் குறிப்பு.

தங்கம் விலை கடந்த சில மாதங்களாக அதிரடியாக உயர்வதும் திடீரென குறைவதுமாக இருந்து வந்தது.சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் 22 ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,600-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.6,700-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.53,440-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.6,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.95.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.95,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சற்று முன்