வார விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டு விடுமுறை நாட்கள், பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை, குடியரசு தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, கிறிஸ்துமஸ் மற்றும் முகூர்த்த நாட்களில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு என்பது 4 மாதங்கள் முன்பே முடிந்துவிடும், அதுவும் டிக்கெட் முன்பதிவு வெறும் சில நிமிடங்களில் முடிந்துவிடும். இதனால் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படுவோர் அதிகமாக உள்ளனர். முன்பு ரயிலில் பொதுப்பெட்டி பயணிகள் ஏறினால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்படுவார்கள். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். அதேபோல் சர்வசாதாரணமாக பொதுப்பெட்டி பயணிகள் முன்பதிவு பெட்டிகளில் ஏற மாட்டார்கள். ஆனால் இப்போது அபபடி இல்லை.. சர்வ சாதாரணமாக முன்பதிவு செய்த பெட்டியில் அன்ரிசர்வ்டு பயணிகள் ஏறுகிறார்கள். அத்துடன் ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு, சீட் தரவும் மறுக்கிறார்கள்.
அப்படி ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்த இருக்கையை யாராவது உட்கார்ந்துகொண்டு உங்களுக்கு சீட் தர மறுத்தால் நீங்கள் உடனடியாக உங்கள் செல்போனில் 139 என்ற ரயில்வே உதவி எண்ணுக்கு அழைக்கலாம். அதேநேரம் செல்போனில் SEAT என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்ட சீட் நம்பரை டைப் செய்யுங்கள், அடுத்ததாக PNR என்று டைப் செய்து ஸ்பேஸ் விட்டு பிஎன்ஆர் நம்பரை டைப்செய்யுங்கள். முடிவில் OCCUPIED BY ANOTHER PASS என்று டைப் செய்த 139 என்ற எண்ணிற்கு எஸ்எம் எஸ் அனுப்புங்கள். அப்படி அனுப்பினால், 10 நிமிடத்தில் பிடிஆர் வந்து அவரை துரத்திவிடுவார்.