யூகோ வங்கியில் நாடு முழுவதும் உள்ள 544 தொழில்பழகுநர் இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதுஇதில் தமிழ்நாட்டில் மட்டும் 20 தொழில்பழகுநர் இடங்கள் இடம்பெற்றுள்ளன. 1 ஆண்டுகள் வங்கி பயிற்சிக்கு ஆர்வமுள்ள டிகிரி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
UCO Bank தொழில்பழகுநர் வயது வரம்பு :
யூகோ வங்கியில் தொழில்பழகுநர் இடங்களுக்கு 01.07.2024 ஆம் தேதியில் படி, விண்ணப்பதார்களுக்கு குறைந்தபட்சம் 20 வயது மற்றும் அதிகபட்சமாக 28 வயது வரை இருக்க வேண்டும். விண்ணப்பதார்கள் 02.07.1996 ஆம் தேதியின் முன் பிறந்தவராக இருக்க வேண்டும். 01.07.2004 ஆம் தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க கூடாது.
எஸ்சி/எஸ்.டி பிரிவினருக்கு கூடுதலாக 5 ஆண்டுகள், ஒபிசி பிரிவினருக்கு கூடுதலாக 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 15 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உள்ளது. கணவரை இழந்த பெண்கள், கணவரைப் பிரிந்த பெண்களுக்கு கூடுதலாக 35 வயது முதல் 40 வயது வரை இருக்கலாம்.
யூகோ வங்கியில் தொழில்பழகுநர் இடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகையாக வழங்கப்படும்.
01.07.2024 ஆம் தேதியின் படி, விண்ணப்பதார்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 16.07.2024
யூகோ வங்கியில் தொழில்பழகுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் https://nats.education.gov.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதனைத்தொடர்ந்து, UCO Bank Apprenticeship Engagement என்று தேடி தொழில்பழகுநர் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை https://ucobank.com/ என்ற இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் யூகோ வங்கியின் இணையத்தளத்தில் வெளியிடப்படும்.