Homeஇந்தியாஉத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை கருதி போடப்பட்ட புதிய சட்டங்கள்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பை கருதி போடப்பட்ட புதிய சட்டங்கள்.

உத்தர பிரதேச மாநில மகளிர் ஆணைய உறுப்பினர்கள் கடந்த 28-ம் தேதி லக்னோவில் ஆலோசனை நடத்தினர். பெண்கள் பாதுகாப்பிற்காக தற்போது நடைமுறையில் இருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடுதலாக என்னென்ன செய்யலாம் என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது, பெண்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த பெண்களுக்கு ஆண் டெய்லர்கள் அளவு எடுக்கக் கூடாது, ஜிம் அல்லது யோகா மையங்களில் பெண்களுக்கு ஆண்கள் பயிற்சி அளிக்கக் கூடாது. முடி திருத்தும் கடைகளில் பெண்களுக்கு பெண்கள் முடி திருத்த வேண்டும் உள்ளிட்ட பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.

பெண்களை கெட்ட தொடுதலில் இருந்து பாதுகாக்கவும், ஆண்களின் தவறான எண்ணங்களை தடுக்கவும் இந்த பரிந்துரைகள் வழிவகுக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இது தொடர்பாக சட்டங்களை உருவாக்குமாறு மகளிர் ஆணையம் மாநில அரசிடம் கோரிக்கை விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்