- Advertisement -
இந்தியா

உத்திரபிரதேச மாவட்டத்தில் கூட்ட நெரிசல் சிக்கி 107 பேர் பலி. வழிபாட்டில் நடந்த சோகம்.

உத்தரப்பிரதேச மாநிலம் சிக்கந்தராவ் மண்டி அருகே உள்ள புல்ராய் கிராமத்தில் போலேபாபா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு ஒரே நேரத்தில் குவிந்திருந்தனர். கூட்டம் முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் கிளம்பிய போது கடும் நெரிசல் ஏற்பட்டது.

கூட்டம் சற்றே கலைந்தபோது 100க்கும் மேற்பட்டோர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதித்த போது, அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுவரை 3 குழந்தைகள், 2 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

சற்று முன் வந்த தகவலின்படி ஆக்ராவில் உள்ள ஏடிஜி ஆக்ரா மண்டல அலுவலகத்தில் உள்ள பிஆர்ஓ, முதலில் 27 ஆக இருந்த இறப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்தது என்பதை உறுதிப்படுத்தினார். ஹத்ராஸ் ‘சத்சங்கில்’ கூட்ட நெரிசலுக்கு முதன்மைக் காரணம், “மூச்சுத்திணறல்” என்று கூறப்படுகிறது.

- Advertisement -
Published by