Homeஇந்தியாமேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன?

மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து நடந்ததற்கான காரணம் என்ன?

மேற்குவங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. இதில் 3-ல் 5 பெட்டிகள் வரை சேதமடைந்துள்ளதாகவும் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் உயிர்ப்பலி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. விபத்து நடந்ததை மட்டும் மேற்கு எல்லை ரயில்வே மேலாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலதிக விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
முதல்வர் வருத்தம்: இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன.” என்று பதிவிட்டுள்ளார்.

தற்போதைய தகவல்களின்படி, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் என்ன?
ஒரே இருப்புப் பாதையில் இரண்டு ரயில்களும் பயணித்ததாகவும், அதன்படி முன்னே சென்ற பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதியதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு ரயில்களும் ஒரே நேரத்தில் ஒரே இருப்புப் பாதையில் பயணித்தது எப்படி என்பது தொடர்பாக விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. காஞ்சன்ஜங்கா ரயில் மோதலுக்கு சீல்டா ரயில் நிலையத்தில் அரசாங்கம் உதவி மையத்தை அமைத்துள்ளது. கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அறியலாம்.
033-23508794
033-23833326

சற்று முன்