Homeலைஃப்ஸ்டைல்டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சில டிப்ஸ்

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க சில டிப்ஸ்

தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்கிவருகிறது டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil). எலும்பு முறிவு காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த காய்ச்சலானது மனிதர்களுக்கு டெங்கு வைரஸ் மூலமாக பரவுகிறது. இந்த காய்ச்சலை ஆரம்ப காலகட்டத்திலேயே சரி செய்ய வேண்டும் இல்லை என்றால், மரணம் கண்டிப்பாக நிகழும். டெங்கு காய்ச்சலுக்கான (dengue fever in tamil) ஆங்கில மருந்து இது வரை கண்டுபிடிக்கவில்லை. இருப்பினும் மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை பரிந்துரைக்கின்றன. இந்த காய்ச்சலானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களிடமிருந்து மிக எளிதாக இரத்த அணுக்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து மிக எளிதில் தாக்குகின்றது.

சரி வாங்க நண்பர்களே டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) வருவதற்கான காரணங்களையும், அவற்றின் அறிகுறிகளையும் மற்றும் கட்டுப்படுத்தும் வழி முறைகளையும் இவற்றில் நாம் காண்போம்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms):-
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 1

இந்த டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) வருவதற்கான அறிகுறிகள் என்னவென்றால் முதலில் சாதாரண காய்ச்சல் ஏற்படும், பின்பு தலைவலி, இரத்த அழுத்தம், இரத்த வாந்தி, முட்டு வலி மற்றும் கண்களின் பின்புறம் வலி ஆகியவற்றை ஏற்படுத்தும். இந்த அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் வருவதற்கான ஆரம்ப நிலையாகும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 2

இரண்டாவது நிலை என்னவென்றால் அதிகமான இரத்த அழுத்தம், சுவாச பிரச்சனை, வயிற்றில் இரத்த கசிவு, உடல் அசதி, வயிற்று பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் (Dengue fever symptoms): 3

சாதாரணமாக தொடர்ந்து காய்ச்சல் அடித்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் சென்று இரத்த பரிசோதனை செய்து தகுந்த ஆலோசனைகளை பின்பற்றுவது மிகவும் நல்லது.

டெங்கு காய்ச்சலுக்கென்று இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால், மருத்துவர்கள் பொதுவாக சித்த மருத்துவத்தில் மிகவும் சிறந்து விளங்கும் நில வேம்பு கஷாயத்தை பரிந்துரைக்கின்றன.

டெங்கு காய்ச்சல் (dengue fever in tamil) எப்படி பரவுகிறது?
இந்த டெங்கு காய்ச்சலானது இருமல், தும்மல் மற்றும் சளி மூலமாக அனைவருக்கும் பரவுவது இல்லை, கொசு கடிப்பதன் மூலமாகவே பரவுகிறது. அதுவும் ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனப்படும் கொசுக்கள் கடிப்பதன் மூலமாகவே பரவுகிறது.

குறிப்பாக இந்த ஏடிஸ் எஜிப்தி’ (Aedes Aegypti) எனப்படும் கொசு, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே தாக்குகின்றது. அதுவும் குழந்தைகளை அதிகமாக தாக்குகின்றது இந்த டெங்கு காய்ச்சல்.
யாரை அதிகமாக தாக்குகின்றது:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த டெங்கு காய்ச்சல் தாக்குகின்றது. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளை இந்த நோய் அதிகமாக தாக்குகின்றது.

டெங்கு காய்ச்சல் தடுக்கும் வழிமுறைகள்:
வீட்டை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். அதாவது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

வீட்டு ஜன்னல்களை மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரை மூடியே வைக்க வேண்டும்.

இரவு தூங்கும்போது கொசு வலையை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

குழந்தைகள் வெளியே விளையாடும்போது கைகள் மூடிய மற்றும் கால்கள் மூடிய சட்டைகளை போட்டுவிட வேண்டும்.

கொசுக்கள் வீட்டுக்குள் நுழையாதவாறு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் என்று அனைத்து இடங்களிலும் கொசு வலைகளை அடித்துவிட வேண்டும்.

இயற்கை முறை மூலம் கொசு விரட்டியாக வேப்பிலைகளை எரித்து புகை மூட்டம் போட்டு கொசுக்களை விரட்டவும்.

டெங்கு காய்ச்சல் மருந்து (Dengue fever in tamil) :-
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கென சித்தர்களால் பரிந்துரைக்கப்பட்ட நிலவேம்பு கஷாயம் டெங்கு காய்ச்சலுக்கான சிறந்த மருந்தாகும்.

சரி வாங்க எப்படி தயாரிப்பது என்று காண்போம்.

தேவையான பொருட்கள்:
(சிறியாநங்கை) நிலவேம்பு,
வெட்டிவேர்,
விலாமிச்சம் வேர்,
பற்படாகம்,
பேய்புடல்,
கோரைக் கிழங்கு,
சந்தனச்சிறாய்,
சுக்கு,
மிளகு.

நிலவேம்பு கசாயம் செய்முறை :
மேலே உள்ள 9 மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து, அரைத்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும்.

நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை (Dengue fever in tamil): ஒரு ஸ்பூன் பொடியில் 200 மி.லி. தண்ணீர்விட்டு நன்றாக கொதிக்கவிடவும். நீர் 50 மி.லி.. அளவாக வற்றியவுடன் இறக்கி, வடிகட்டவும். மிதமான சூட்டில் காலை, மாலை என இரண்டு வேலைகளும் தொடர்ந்து பருகவேண்டும்.

மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீர்ச்சத்து குறைந்து விடும். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவு நீர் சத்து உள்ள பழங்களை தினமும் உட்கொள்ள வேண்டும்.

சற்று முன்