Homeலைஃப்ஸ்டைல்இவர்களெல்லாம் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடவே கூடாது.

இவர்களெல்லாம் கட்டாயம் பலாப்பழம் சாப்பிடவே கூடாது.

பலாப்பழம் எல்லாருக்கும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த பழத்தை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். காரணம் இதில் உள்ள இனிப்பு சுவை தான். மேலும் இவை சீசனில் கிடைப்பதால் இதனை விரும்புகிறார்கள். உணவுகளில் பழமாக இருந்தாலும் சரி, காய்கறியாக இருந்தாலும் சரி, சில உணவுகள் சிலருக்கு செட் ஆகாது. அந்த உணவுகளை எல்லாம் சாப்பிட கூடாது மீறி சாப்பிட்டால் உடலில் பக்க பக்க விளைவுகள் ஏற்படும். அதனால் தான் இந்த பதிவில் பலாப்பழம் யாரெல்லாம் சாப்பிட கூடாது என அறிந்து கொள்வோம் வாங்க..

தோல் அலர்ஜி பிரச்சனை:

சில நபர்களுக்கு தோலில் அலர்ஜி பிரச்சனை ஏற்படும். இதற்காக மருத்துவரை நாடிசெல்வார்கள். அதற்கு முதலில் நீங்கள் சாப்பிடும் உணவுகள் ஏதும் ஒத்துக்காமல் இருக்கும். அதனால் அதனை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். தோலில் அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழத்தை சாப்பிட கூடாது. ஏனென்றால் இது உங்களின் அழற்சி பிரச்சனையை அதிகப்படுத்தும்.

இரத்தத்தில் பிரச்சனை இருப்பவர்கள்:

இரத்தத்தில் ஏதும் பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் பலாப்பழம் சாப்பிடுவதன் மூலம் உங்களின் இரத்த பிரச்சனை அதிகரிக்கக்கூடும்.

ஆப்ரேஷன் செய்துள்ளவர்கள்:

அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு உணவு முறைகளை பார்த்து பார்த்து கொடுப்பார்கள். இதன் மூலம் காயம் அதிகமாகி விட கூடாது என்பதற்காக. அப்படி இருக்கும் போது பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் பலா பழம் சாப்பிட்டால் அறுவை சிகிச்சையின் காயம் குணமாகுவதற்கு நேரம் எடுத்து கொள்ளும்.

கர்ப்பமாக இருப்பவர்கள்:

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களில் குழந்தைகளுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வார்கள். கர்ப்பமாக இருப்பவர்கள் மறந்தும் கூட பலாப்பழத்தை எடுத்து கொள்ள கூடாது. ஏனென்றால் குழந்தையின் வளர்ச்சியில் பிரச்சனையை ஏற்படுத்தும்.

தாய்ப்பால் கொடுப்பவர்கள்:

நம் முன்னோர்கள் வீட்டில் இருந்தால் அவர்கள் நிறைய அறிவுரைகளை கூறுவார்கள். அதிலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இருந்தால் அவர்கள் என்னென்ன உணவு சாப்பிட வேண்டும்,சாப்பிட கூடாது என்ற அறிவுரைகளை எல்லாம் கூறுவார்கள். இப்போது யாரும் கூட்டு குடும்பமாக இருப்பதில்லை, தனி குடுத்தனம் தான் இருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வரும் டவுட்களை மொபைலில் தான் சர்ச் செய்து பார்ப்பார்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது, குழந்தைக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனையை ஏற்படுத்தும்.

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள்:

சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் இந்த பிரச்சனையோடு பலாப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் உங்களின் பிரச்சனை இன்னும்  அதிகமாகும்.

சற்று முன்