Homeதமிழ்நாடுபத்தாம் வகுப்பிற்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.

பத்தாம் வகுப்பிற்கு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு துணை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் துணைத்தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை வரும் 24 ஆம்தேதி முதல் இணையதளத்தின் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் ஹால் டிக்கெட்டை வரும் 24ஆம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜூன் 25, 26 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடத்திற்கான செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே செய்முறை தேர்வு நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

சற்று முன்