Homeதமிழ்நாடுஏசி 1 மணி நேரம் ஓடினால் இவ்வளவு கரண்ட் பில் ஆகுமா?

ஏசி 1 மணி நேரம் ஓடினால் இவ்வளவு கரண்ட் பில் ஆகுமா?

ஒரு மணி நேரம் ஏசி ஓடினால் எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்பதை நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். பொதுவாக, உங்கள் ஏசி இயந்திரத்தின் மின்சாரக் கட்டணம், நீங்கள் ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் ஏசியை பயன்படுத்துகிறீர்கள், உங்கள் ஏசியின் வகை, திறன் மற்றும் வேகத்தைப் பொறுத்தது.

அதன்படி ஏசி 24 மணி நேரத்தில் 1000 முதல் 3000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது ஏசியின் டன் பொறுத்து மாறுபடும். பொதுவாக 1 டன், 1.5 ஏசிகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். 1 டன் ஏசி என்றால் 1000 வாட்ஸ் மற்றும் 1.5 டன் என்றால் 1,500 வாட்ஸ். அதாவது 1 டன் ஏசி 1000 வாட்ஸ் மின்சாரத்தை செலவழிக்கும்.

அதுமட்டுமன்றி ஒரு டன் திறன் கொண்ட இரண்டு ஏசிகள் வெவ்வேறு சக்தியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது அவற்றின் மதிப்பீட்டை பொறுத்தது. உதாரணமாக, உங்களிடம் 5 நட்சத்திரங்கள் கொண்ட 1 டன் ஏசி உள்ளது என வைத்துக்கொள்வோம். அது 1 மணி நேரத்தில் 1000 வாட்ஸ் அதாவது 1 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும்.

இதேபோல 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட 1.5 டன் ஏசியை, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு சுமார் 360 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும். அதன்படி ஒரு யூனிட் விலை ரூ.7 என்றால் 360 யூனிட்களுக்கு மாதம் ரூ.2,500 மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

நீங்கள் ஏசியை பயன்படுத்தும் வெப்பநிலையைப் பொறுத்து உங்களது மின்சார கட்டணம் தீர்மானிக்கப்படும். உங்கள் ஏசி 1 மணி நேரத்திற்கு 16-ல் இயங்குகிறது என்று வைத்துக்கொள்வோம். மற்றொரு நபர் 1 மணி நேரத்திற்கு 21-ல் ஏசியை இயக்குகிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது இவர்கள் இருவரில் ஏசியை குறைவான வெப்பநிலையில் இயக்கியவருக்கே கட்டணம் அதிகமாக வரும்.

சற்று முன்