உங்களிடம் 10 ஆண்டுகள் பழமையான ஆதார் அட்டை இருந்தால் அதை இதுவரை ஒரு முறை கூட புதுப்பிக்கவில்லை என்றால் அத்தகைய ஆதார் அட்டைகள் நிச்சயம் புதுப்பிக்கப்பட வேண்டும். இதற்காக ஆதார் சேவை மையத்திற்கு சென்றால் ரூ 50 செலவு செய்ய வேண்டும்.
ஒரு பைசா செலவில்லாமல் எப்படி ஆதார் கார்டை புதுப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். அதிலும் UIDAI எனும் வெப்சைட்டில் போய் புதுப்பித்தால் இலவசம். அடையாள அட்டையாக பான் கார்டையும் முகவரிக்கு வாக்காளர் அட்டையையும் கொடுக்கலாம்.
https://myaadhaar.uidai.gov.in/ என்ற இணையதளத்தில் போய் உங்கள் ஆதார் எண்ணுடன் உள்ளே செல்லவும், அப்போது நீங்கள் பதிவு செய்திருந்த செல்போன் எண்ணிற்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதை உள்ளீடு செய்து உள்ளே சென்றால் உங்கள் முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் சரியாக உள்ளதா என ஒரு முறை சரி பாருங்கள். ஒரு வேளை அதில் உள்ள உங்கள் சுயவிவரங்களில் எந்த தவறும் இல்லாமல் சரியாக இருந்தால் “என்னுடைய விவரங்கள் சரியாக இருக்கின்றன ” என்பதை கிளிக் செய்யவும்.
ஒரு வேளை தவறாக இருந்தால் செய்ய வேண்டிய மாற்றங்களை செய்ய வேண்டும். இதற்காக நீங்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை ஆதாரமாக சமர்ப்பிக்க வேண்டும். அங்கு வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட நிறைய ஆதாரங்கள் இருக்கும். அதில் நீங்கள் எதை சப்மிட் செய்கிறீர்களோ அதை கிளிக் செய்யுங்கள். உங்கள் அடையாள அட்டையை அப்லோடு செய்யுங்கள். அதன் அளவு 2 மெகா பைட்டை விட குறைவாக இருத்தல் வேண்டும். முகவரி மாற்றம் செய்ய வேண்டுமானால் அதை செலக்ட் செய்து அதற்கான ஆதாரத்தையோ ஆவணத்தையோ அப்லோடு செய்ய வேண்டும். அந்த ஃபைலும் 2 மெகா பைட்டைவிட குறைவாக இருத்தல் வேண்டும். அடையாள அட்டையும் முகவரி ஆவணமும் JPEG, PNG or PDF ஃபார்மட்டில் இருத்த வேண்டும். இதையடுத்து சப்மிட் செய்ய வேண்டும். இந்திய குடிமக்கள், மக்கள் தொகை குறித்த தகவல், பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் ஆகியவற்றை இலவசமாகப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
https://bhuvan.nrsc.gov.in/aadhaar/ என்ற இணையதளத்தில் சென்று உங்களுக்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை கண்டறியலாம். நீங்கள் எந்த பகுதியில் இருக்கிறீர்கள் என்பதை கொடுத்துவிட்டால் அருகில் உள்ள ஆதார் மையம் பற்றிய தகவலை பெறலாம். பின்கோடு மூலம் அருகில் உள்ள ஆதார் மையத்தையும் நீங்கள் அறிய முடியும். அங்கு மேற்சொன்னதை போல் முகவரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவற்றை நேரில் கொண்டு போய் புதுப்பித்துக் கொள்ளலாம்.
உங்கள் ஆதார் கார்டில் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் தேவையான மாற்றங்களை இலவசமாக செய்து கொள்ளுங்கள். 15ஆம் தேதி முதல் எந்த சிறிய திருத்தத்திற்கும் ரூ 50 கொடுக்க வேண்டும்.