கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் வரும் 24-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து இன்று அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். சென்னையில் ஜெயக்குமார், கோவையில் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் செல்லூர் ராஜூ ஆகியோர் போராட்டங்களில் பங்கேற்கின்றனர்.