Homeதமிழ்நாடுபகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு இன்று 16வது நாள் காரியம்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவருக்கு இன்று 16வது நாள் காரியம்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5 ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேணுகோபால் பெருமாள் தெருவில் கட்டி வரும் வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக முதலில் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 11 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இன்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு 16 ஆவது நாள் காரியம். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவருடைய 16 ஆவது நாள் காரியத்தின் போது எப்படியும் சம்பந்தப்பட்டவர்களை பழிக்கு பழி வாங்க கொலை செய்வோம் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்ததாக தெரிகிறது.எனவே இன்று ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொலை நடக்க வாய்ப்பிருக்கிறது என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து போலீஸார் சென்னையில் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

சற்று முன்