Homeதமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை கைது செய்த போலீஸ்.

ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களை கைது செய்த போலீஸ்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே திரண்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான காலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போக்குவரத்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக தடைபட்டுள்ளது.

உடற்கூராய்வு முடிந்தும் ஆம்ஸ்ட்ராங் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிப்பு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிரமம், ரயில் நிலையத்துக்கு செல்வோருக்கு சிரமம் எனப் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டதால் போலீஸ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டளனர். பேச்சுவார்த்தையில் சமாதானம் ஏற்படாததால் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மருத்துவமனை வந்தார்.

பழிக்குப் பழி கொலையா?- ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை கைது செய்து தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் பழி தீர்க்க இந்தப் படுகொலை நடத்தப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

சற்று முன்