Homeதமிழ்நாடுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியமான ரவுடி எஸ்கேப்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கியமான ரவுடி எஸ்கேப்

சென்னையில் கடந்த 5ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.கொலை வழக்கில் இதுவரை 16 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் திருவேங்கடம் என்ற குற்றவாளி தப்பி ஓட முயன்றதாக ஜூலை 15ம் தேதி என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். மேலும் அரசியல் கட்சியை சேர்ந்த சில நபர்களும் இதில் சிக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அடுத்தடுத்து கொலையில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருவதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கொலையில் பல்வேறு ரவுடி குழுவினர் ஒன்றிணைந்து திட்டம் திட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கொலையில் பிரபல ரவுடியான சீசிங் ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகித்துள்ளனர். இவர் ஆற்காடு சுரேஷின் கூட்டாளியாக இருந்தவர். இந்த கொலை திட்டத்தில் இவரும் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

சீசிங் ராஜாவை கைது செய்து விசாரணை செய்தால், உண்மை நிலவரம் தெரியும் என்பதால், அவரை போலீசார் தீவிரமாக தேடினர். இவர், ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இந்த நிலையில் ரவுடி சீசிங் ராஜாவை, தனிப்படை போலீசார் நெருங்கிய நிலையில் தப்பி ஒடியதாக தகவல்கள் கூறுகின்றன. காவல்துறையினரை கண்டதும் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்