Homeதமிழ்நாடுஸ்டாலின் சைக்கிளில் சென்றதைப் பார்த்த, ராகுல் காந்திக்கு வந்த ஆசை

ஸ்டாலின் சைக்கிளில் சென்றதைப் பார்த்த, ராகுல் காந்திக்கு வந்த ஆசை

முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், சிகாகோவில் சைக்கிள் ஓட்டுவதைப் போன்ற விடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஒரு விஷயத்தை முன்வைத்துள்ளார். அதாவது, ”சகோதரரே, நாம் இருவரும் ஒன்றாக சென்னையில் எப்போது சைக்கிளிங் செல்வது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின், அன்பு சகோதரர் ராகுல் காந்தி அவர்களே உங்களுக்கு எப்போது ஓய்வு கிடைக்கிறதோ, அப்போது சைக்கிளிங் செல்லலாம். நாம் இருவரும் ஒன்றாக சென்னையின் முக்கிய பகுதிகளை கண்டு ரசிக்கலாம். எனது தரப்பில் இருந்து ஸ்வீட் பாக்ஸ் மிச்சமிருக்கிறது.

எனவே சைக்கிளிங் சென்று விட்டு, அதன்பிறகு மிகவும் சுவையான தென்னிந்திய மதிய உணவை ஸ்வீட்டுடன் எனது வீட்டில் சாப்பிடலாம் என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் பெரிதும் கவனம் பெற்றுள்ளது.

சற்று முன்