Homeதமிழ்நாடுநீட் தேர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்!

நீட் தேர்வை எதிர்த்து காங்கிரஸ் போராட்டம்!

நீட் ( NEET – National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இத்தகைய சூழலில்தான் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு, நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை என முறைகேடு சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இதனையடுத்து நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்தது. மேலும் நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கும் மத்திய அரசு மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில், நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளனர். அனைத்து மாநில தலைநகரங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் என கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள்(ஜூன் 21) காங்கிரஸ் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சற்று முன்