விலை குறையும் பொருட்கள்:
* இறால், மீன் உணவுகள் உள்ளிட்ட சில கடல் உணவுகளின் மீதான அடிப்படை சுங்க வரி 5 சதவீதம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம் கடல் உணவுகளின் விலை குறையும். இந்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் கடல் உணவு உற்பத்தி, ஏற்றுமதி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை பங்குச்சந்தையில் உச்சம் கண்டன.
* விண்வெளி, பாதுகாப்பு துறையில் இன்றியமையாத 25 முக்கியமான கனிமங்களுக்கு சுங்கவரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரோநிக்கல், ப்ளிஸ்டர் காப்பர், ஆகிய கனிமங்களுக்கு அடிப்படை சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது.
*செல்போன்கள், செல்போன் சார்ஜர்கள், மொபைல் உதிரி பாகங்களுக்கான சுங்க வரி 15 சதவீமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்கள் மற்றும் சார்ஜர்கள் விலை குறைய வாய்ப்புள்ளது.
* தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் ஆக குறைக்கப்பட்டது. தங்கத்திற்கான இறக்குமதி இதற்கு முன்பு 15 சதவிகிதமாக இருந்தது. பிளாட்டினத்திற்கான வரி 6.4 சதவிகிதமாகவும் வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி 6 சதவிகிதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
* புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலுமாக வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை வெகுவாகக் குறைகிறது.
*சூரிய மின்சாரம் தொடர்பான உதிரிபாகங்கள் மீதான சுங்க வரியை கைவிடுவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சோலார் செல்கள், சோலார் பேனல்கள் மீதான மூலதனப் பொருட்களுக்கான வரி ரத்தாகிறது.
*தோல் மற்றும் காலணி தயாரிப்புகளுக்கு சுங்க வரி ரத்து செய்யப்படுகிறது. இதனால் காலணிகள் விலை குறையும்.
விலை அதிகரிக்கும் பொருட்கள்;
அமோனியம் நைட்ரேட் மீதான சுங்க வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், அமோனியம் நைட்ரேட் சார்ந்த பொருட்கள் விலை உயரும். மக்காத பிளாஸ்டிக் மீதான வரியும் 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சில தொலைதொடர்பு உபகரணங்களில் அடிப்படை சுங்க வரி 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 1 சதவீதம் டிசிஎஸ் விதிக்க அரசு முன்மொழிந்துள்ளது.