Homeதமிழ்நாடுதேனி மாவட்டத்தில் நடந்த சோகம். பஸுக்குள் பெய்த மழை. பயணிகள் அவதி.

தேனி மாவட்டத்தில் நடந்த சோகம். பஸுக்குள் பெய்த மழை. பயணிகள் அவதி.

தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சின்னமனூர் செல்லும் பேருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது வீரபாண்டியை கடந்த போது, கன மழை பெய்துள்ளது. இதனால், பேருந்தின் மேற்கூரை பழுது காரணமாக பேருந்துக்குள் மழை நீர் கொட்டியுள்ளது.

இந்நிலையில், பேருந்தின் இருக்கைகள் முழுவதும் மழைநீர் வடிந்ததால் பயணிகள் நின்று கொண்டே மழையில் நனைத்தபடி பயணித்துள்ளனர். பேருந்து நடத்துனரும் மழையில் நனைந்தவாறே பணியாற்றி வந்துள்ளார். இதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

சற்று முன்