மின்சார ரயில்களுக்கு சென்னையில் தனி மவுசு உள்ளது. குறிப்பாக வேலை, கல்லூரிக்கு செல்லும் மக்கள் மின்சார ரயில்களால் அதிகம் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சென்னையில் 55 மின்சார ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் யார்டு ரயில்வே ஸ்டேஷனின் 2ம் கட்ட புனரமைப்பு பணியுடன் சேர்ந்து தாம்பரம் யார்டுவில் பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. பயணிகள் மற்றும் ரயில்களின் பாதுகாப்பு கருதி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணியின் காரணமாக ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் )14-ம் தேதி வரை 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜூலை 23 – ஆகஸ்ட் 14 வரை இருமார்க்கங்களிலும் 55 மின்சார ரயில்கள் ரத்து என்ற அறிவிப்பை தெற்கு ரயில்வே திரும்பப் பெற்றது. சனி (ஜூலை 27 ) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28 ) புறநகர் ரயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் முன்னதாக அறிவிக்கப்பட்டபடியே ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 03 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை புறநகர் ரயில் சேவைகள் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் முன்பு அறிவித்தது போலவே ரத்து செய்யப்படும்.