Homeதமிழ்நாடுசிலிண்டர் விலை மேலும் 48 ரூபாய் உயர்வு

சிலிண்டர் விலை மேலும் 48 ரூபாய் உயர்வு

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல், வர்த்தகப் பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,855 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் அதன் விலை ₹1903ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி வணிக பயன்பாடு சிலிண்டர் விலை ₹7.50 உயர்த்தப்பட்டு ₹1,817க்கு விற்பனை ஆனது. அதையடுத்து செப்டம்பர் 1ஆம் தேதி ₹38 உயர்த்தப்பட்டு, ₹1,855க்கு விற்கப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதே நேரம் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.818.50 என்ற அளவிலேயே தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்

சற்று முன்