‘பெஞ்சல்’ புயல் காரணமாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க, முதல்வர் ஸ்டாலின் தன் ஒரு மாத ஊதியம் காசோலையை, முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நேற்று தலைமை செயலர் முருகானந்தத்திடம் வழங்கினார்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினை தொடர்ந்து தமது ஒருமாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்க தி.மு.க. எம்.பி.க்களும் முடிவு செய்துள்ளனர். மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக எம்.பி.க்கள் தலா ரூ.1 லட்சம் வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி.ஆர்.பாலு தகவல் தெரிவித்துள்ளார்.