Homeதமிழ்நாடுடிரைவிங் லைசன்ஸை தொலைச்சிட்டீங்களா? இந்த உதவி உங்களுக்கு தான்

டிரைவிங் லைசன்ஸை தொலைச்சிட்டீங்களா? இந்த உதவி உங்களுக்கு தான்

ஓட்டுனர் உரிமம் (Driving Licence) எதிர்பாராத விதமாக தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, எளிய முறையில் டூப்ளிகேட் உரிமத்தை பெற முடியும். அது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம். RTO அலுவலகங்களில் ஆன்லைன் வாயிலாக ஒருவர் டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம்.

டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமத்தை ஆன்லைனில் கீழ் காணும் வழிமுறைகளை பின்பற்றி விண்ணப்பிக்கலாம்.

1: முதலில் பரிவஹன் சேவா போர்ட்டலை ஓபன் செய்து பார்வையிடவும்.

2: அதன்பின்னர் “Drivers/ Learners License” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இதனால் புதிய பக்கம் ஒன்று திறக்கப்படும். இந்தப்பக்கத்தில், கீழ்தோன்றும் மெனுவிலிருந்து விண்ணப்பத்தாரர் வசிக்கும் மாநிலத்தைத் தேர்வு செய்யவும்.

3: இதனையடுத்து “Apply for Duplicate License” என்பதை தேர்வு செய்யவும்.

4: இதன்பின்னர் விண்ணப்பப் படிவத்தில்,சரியான விவரங்களை நிரப்ப வேண்டும்.

5: அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் பாஸ்போர்ட் புகைப்படங்கள் போன்ற தேவையான ஆவணங்களை குறிப்பிட்ட அளவில், அதற்கான பார்மேட்டில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

6: இதனையடுத்து அதிலுள்ள ஆன்லைன் கட்டண முறைகளில், ஒன்றை தேர்வு செய்து கட்டணத்தை செலுத்தவும்.

7: இதன் மூலமாக விண்ணப்பம் சமர்பிக்கப்படும். இதனையடுத்து பரிவஹன் சேவா போர்ட்டலை பயன்படுத்தி டூப்ளிகேட் DL விண்ணப்பத்தின் நிலவரத்தை பார்க்கலாம். விண்ணப்ப எண் அல்லது ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, ஸ்டேட்டஸ்-ஐ சரிபார்க்கலாம்.

சற்று முன்