Homeதமிழ்நாடுகோட் பட பெயரில் சர்ச்சை

கோட் பட பெயரில் சர்ச்சை

கோட் படத்தின் தலைப்பில் சனாதனம் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்பியான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என குறிப்பிட்டுள்ளார்.விஜய் தற்போது அரசியலுக்கு வந்துள்ளதால் இந்த கேள்வியை கேட்பதாகவும் விளக்கம் அளிததார் விடுதலை சிறுத்தைகள் எம்பி ரவிக்குமார்.

இந்த பதிவு பெரும் பேசு பொருளாகியுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், ரவிக்குமார் சனாதனத்தை பற்றி பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

மேலும் இதுவரை தங்களை மட்டும்தான் சனாதனத்தை வைத்து பேசினார்கள், தற்போது விஜய்யையும் இழுத்து பேசுகிறார்கள். ரவிக்குமார் இந்த கருத்தின் மூலம் தனக்கு சனாதனம் என்றால் என்ன என்றே தெரியாது என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

முன்னதாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காமல் அலைக்கழித்து வருவதற்கு தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்திருந்தார். சென்னையில் கார் ரேஸ் நடத்த அனுமதி அளிக்க முடிந்த நிலையில் விஜய்க்கு அனுமதி வழங்க முடியாதா என்றும் இடத்தை கொடுத்தால் மடத்தை பிடிப்பார் என்ற பயத்தில் தமிழக அரசு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு இடம் கொடுக்க மறுக்கிறதா என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்