Homeதமிழ்நாடுHoot செயலி மூடப்பட்டது. சௌந்தர்யா ரஜினி காந்த் அவர்களால் தொடங்கப்பட்ட ஆப் இது.

Hoot செயலி மூடப்பட்டது. சௌந்தர்யா ரஜினி காந்த் அவர்களால் தொடங்கப்பட்ட ஆப் இது.

சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என ஆசையிருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத காரணத்தால் பலருக்கும் அந்த ஆசையை நிறைவேற்ற முடிவதில்லை. இந்நிலையில் இவர்களுக்கான வரப்பிரசாதமாக ரஜினி மகளின் ஹூட் ஆப் ஆரம்பிக்கப்பட்டது.

ஆம், ஹூட் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜாக யார் வேண்டுமானாலும் உலகின் எந்த மூலையிலிருந்தும் தங்கள் மனதில் தோன்றும் கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிட முடியும். அம்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹூட் குரல் பதிவு செயலியை நிறுவினார் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா.தமிழ், இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 15 இந்திய மொழிகளிலும், 10 சர்வதேச மொழிகளிலும் ஹூட் செயலி வெளியிடப்பட்டது.டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு போட்டியாக ஹூட் செயலி விரைவில் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்தின் Hoote செயலி மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் சமீபத்தில் மூடப்பட்ட Koo செயலியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியும் தனது செயல்பாட்டை நிறுத்தியது.மேலும், WhatsApp-க்கு மாற்றாக Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தொடங்கிய Arattai செயலியும் வெறும் 100,000 பதிவிறக்கங்கள் மட்டுமே பெற்று மக்களின் வரவேற்பை பெற தவறியுள்ளது.

ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த செயலிகளுக்கு மாற்றாக எந்த புதுமையான யோசனைகள், உக்திகள் இல்லாமல் அறிமுகமானதால் தான், இந்த 3 செயலிகளும் குறுகிய காலத்திலேயே தங்களின் பயனர்களின் ஆர்வத்தை இழந்ததாக விமர்சிக்கப்படுகிறது

சற்று முன்