இன்று மொஹரம் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் அனுசரிக்கப்பட உள்ளது.இன்றுஅரசு விடுமுறை என்பதால் சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 8:00 மணி முதல் 11 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் ஆறு நிமிட வழியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் அதிகாலை 5 மணி முதல் காலை எட்டு மணி வரையும் காலை 11:00 மணி முதல் மாலை 5 மணி வரையும் 7 நிமிடங்களில் ரயில்கள் இயக்கப்படும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.