Homeதமிழ்நாடுஇன்று மொகரம் பண்டிகை. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு உண்டான வரலாற்றை தெரிந்து கொள்வோமா.

இன்று மொகரம் பண்டிகை. இந்த பண்டிகையை கொண்டாடுவதற்கு உண்டான வரலாற்றை தெரிந்து கொள்வோமா.

மொஹரம் திருநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். சில காரணங்களுக்காக கொண்டாடவும், சிலர் துக்க தினமாகவும் கொண்டாடுகின்றனர்.

இஸ்லாமியர்கள் இரண்டு வகை பிரிவில் உள்ளனர் ஒன்று ஷியா மற்றோன்று சன்னி பிரிவு இஸ்லாமியர்கள்.இந்த இரண்டு பிரிவு இஸ்லாமியர்களும் சில வேறு பட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.

மொஹரம் பண்டிகை கர்பாலா போரில் முகம்மது நபியின் பேரனான ஹுசைன் இப்னு அலி கொல்லப்பட்டதை துக்க நாளாக கடைப்பிடிக்கின்றனர்.சன்னி பிரிவினர் எகிப்திய அரசரை வெற்றி கொண்ட நாளாக இந்த திருநாளை கொண்டாடுகின்றனர்.

இந்த புனித மாதத்தில் சண்டைகள், புனிதப் போர் புரிவதாற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.இந்த நாளில் நோன்பு இருப்பதால் வாழ்வு வளமையாகும். மொஹரம் மாதத்தின் 10ம் நாள் (அரபு மொழியில் ஆசூரா) தியாகத் திருநாளாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

சில இஸ்லாமியர்கள் இந்த மாதத்தின் 9 மற்றும் 10ம் நாளிலும் அல்லது 10ம் நாள் மட்டும் உண்ணா நோன்பு இருப்பது வழக்கமாக வைத்துள்ளனர்.

சிலர் இந்த தியாகத் திருநாளில் ஆசுரா என்று கத்தியால் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இந்த தியாகத்திருநாள் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.

சற்று முன்