Homeதமிழ்நாடுஜூலை 1 முதல் புதுசாக அறிமுகமாகும் விதிமுறைகள். இதையெல்லாம் தவறினால் தண்டனை உண்டு.

ஜூலை 1 முதல் புதுசாக அறிமுகமாகும் விதிமுறைகள். இதையெல்லாம் தவறினால் தண்டனை உண்டு.

எல்பிஜி சிலிண்டர் விலை

எல்பிஜி சிலிண்டர் விலை ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஜூன் 1ம் தேதி வணிக ரீயிலான சிலிண்டர் விலையை அரசு குறைத்திருந்தது. அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதி சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்து மோடி 3.0 அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சிலிண்டர் விலை குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் நுகர்வோர்கள் இருக்கின்றனர்.

இந்தியன் வங்கியின் சிறப்பு எஃப்டி முதலீட்டு திட்டம்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு FD திட்டத்தை வழங்குகிறது. பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 300 மற்றும் 400 நாட்களுக்கான FD முதலீட்டு திட்டங்களை வழங்குகிறது. இந்தியன் வங்கியின் இணையதளத்தில் வெளியான தகவலில், 2024 ஜூன் 30ம் தேதி 2024 வரை Ind Super 400 Days மற்றும் Ind Supreme 300 Days FD திட்டங்களில் முதலீடு செய்யலாம். இந்த சிறப்பு FD என்பது காலபிள் FD ஆகும். Callable FD என்பது இதில் நீங்கள் முதிர்வு காலத்திற்கு முன்பே பணம் எடுக்கலாம் என்பதாகும்.

வங்கிகள் விடுமுறை

ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என்ற பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே வெளியிடும். அந்த வகையில் வருகிற ஜூலை மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியல் வெளியாகியுள்ளது. வழக்கமான சனி – ஞாயிறு விடுமுறை தவிர்த்து மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. இது தவிர உள்ளூர் விடுமுறையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கியின் சிறப்பு FD திட்டம்

பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 222 நாட்கள், 333 நாட்கள் மற்றும் 444 நாட்களுக்கான சிறப்பு FD திட்டங்களை வழங்குகிறது. இந்த சிறப்பு FDக்கு அதிகபட்சமாக 8.05 சதவீதம் வட்டி கிடைக்கும். வங்கியின் இணையதளத்தின்படி, வங்கி 222 நாட்களுக்கான FDக்கு 7.05 சதவீத வட்டியையும், 333 நாட்களுக்கான FDக்கு 7.10 சதவீதத்தையும், 444 நாட்களின் FDக்கு 7.25 சதவீதத்தையும் வழங்குகிறது. சூப்பர் சீனியர் குடிமக்களுக்கு 444 நாட்கள் FDக்கு 8.05 சதவீத வட்டியை வங்கி வழங்குகிறது.

கார் விலை உயர்கிறது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் விலையை ஜூலை 1 முதல் 2 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பொருட்களின் விலை உயர்வை ஈடுகட்ட இந்த விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த உயர்வு அனைத்து வகையான வணிக வாகனங்களுக்கும் பொருந்தும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறியுள்ள.

கிரெடிட் கார்டு பில் செலுத்துவதற்கான புதிய விதிகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) புதிய விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் காரணமாக கிரெடிட் கார்டு பில் செலுத்துவதில் சில மாற்றங்கள் இருக்கும். அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (BBPS) மூலம் செலுத்தப்பட வேண்டிய இந்த உத்தரவு, PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues போன்ற முக்கிய ஃபின்டெக் தளங்களை பாதிக்கும். ஜூலை 1 முதல், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் BBPS மூலம் செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது. இதுவரை, கிரெடிட் கார்டுகளை வழங்க அங்கீகரிக்கப்பட்ட 34 வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே BBPS மூலம் கட்டணம் செலுத்தும் முறையை செயல்படுத்தியுள்ளன.

வருமான வரி ரிட்டன்

2023-24 நிதியாண்டுக்கான (மதிப்பீட்டு ஆண்டு 2024-25) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 என்று வருமான வரித் துறை நிர்ணயித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வரித் தாக்கல் செய்வது நல்லது.

எஸ்பிஐ & ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு!

ஜூலை 1ஆம் தேதி முதல் குறிப்பிட்ட சில கிரெடிட் கார்டுகளுக்கான அரசு தொடர்பான பரிவர்த்தனைகளில் ரிவார்டு பாயிண்டுகளை சேமிப்பதை நிறுத்துவதாக எஸ்பிஐ கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி பல்வேறு கிரெடிட் கார்டு சேவைகளில் திருத்தங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. இதில் அனைத்து கார்டுகளிலும் (எமரால்டு பிரைவேட் மெட்டல் கிரெடிட் தவிர) கார்டு மாற்றுக் கட்டணத்தை 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாக உயர்த்தியுள்ளது.

ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள்

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவின் ரீசார்ஜ் திட்டங்களுக்கான கட்டணங்கள் ஜூலை 3 முதல் அதிகரிக்கின்றன . புதிய ரீசார்ஜ் திட்டங்களின் கட்டண பட்டியலை நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அனைத்து நிறுவனங்களும் 20 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கட்டணங்களை உயர்த்தியுள்ளன.

சற்று முன்