Homeதமிழ்நாடுகாளையார் குறிச்சியில் விபரீதம். பட்டாசு ஆலை வெடித்து இரண்டு பேர் பலி

காளையார் குறிச்சியில் விபரீதம். பட்டாசு ஆலை வெடித்து இரண்டு பேர் பலி

காளையார் குறிச்சியில் உள்ள சுப்ரீம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அருகே உள்ள காளையார் குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இன்று (ஜூலை 9) திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மாரியப்பன் (45) மற்றும் முத்துமுருகன் (45) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இதில், 2 பெண்கள் காயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே அங்கு சென்ற போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சற்று முன்