Homeதமிழ்நாடுகள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஐ தாண்டியுள்ளது.இதுவரை இச்சம்பவத்தில் விஷச்சாராய விற்பனையில் தொடர்புடைய நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இதில் தீவிர விசாரணை மேற்கொண்டு, குறிப்பாக விஷச்சாராயம் தயாரிக்க மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாயும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலருக்கு புதுச்சேரி ஜிப்மர், (கள்ளக்குறிச்சி, சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சற்று முன்